கிராம சபா கூட்டத்தில் பங்கேற்காத தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் இரண்டு வாருங்கள் வேலை மறுப்பால் கிராம சபா கூட்டத்தில் கொந்தளித்த பெண்களால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம் மேல தருமபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசுகையில், கிராம சபா எங்கு நடைபெறுகிறது என்பதை தேசிய ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தருவதில்லை எனவும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாக தராததால் கிராம சபா எங்கே நடைபெறுகிறது என தெரியாமல் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், கிராம சபாவில் பங்கேற்காத தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு வாரங்கள் வேலை மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.மத்திய அரசால் வழங்கப்படும் இந்த வேலையை மறுப்பதற்கு ஊராட்சியில் உள்ள எந்த அதிகாரிகளுக்கும் உரிமை இல்லை எனவும் தங்களுக்கு வேலை மறுப்பது அநியாயம் எனவும் ஆவேசத்தோடு குற்றம் சாட்டினார்.
இது மட்டும் இன்றி மக்கள் நலன் பணியாளர்கள் முதியவர்களான தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களை வாடி, போடி எனவும் மரியாதை குறைவாக பேசுவதாகவும் இன்னும் பல பிரச்சனைகளை கூறியதோடு அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.
இது விவகாரங்கள் தொடர்பாக ஊராட்சித் தலைவி ஜெகதீஸ்வரி இடம் கேட்டபோது இரண்டு வாரங்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக கூறவில்லை எனது கிராம சபா தகவல் குறித்த நோட்டீஸ் தனித்தனியே கொடுக்காமல் சுத்தமாக கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
முதியவர்களான பெண்கள் கிராம சபாவில் பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் கூட்டம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.