இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது.
எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவர்களால் சிறு சிறு வேலைகள் கூட செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறா்கள். நாம் இப்போது கீழ்வாதம், மூட்டுவலி, குதிகால் வலி ஆகியவற்றை போக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம்.
இதற்கு நமது சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது. வெல்லம், மஞ்சள்தூள், சுண்ணாம்பு, தேவையான அளவு தண்ணீர் இது மட்டுமே. முதலில் வெல்லத்தை துருவி கொள்ளவும்.
துருவிய வெல்லம் 4 அல்லது 5 டேபிள் ஸ்பூன் வருமாறு எடுத்துக்கொள்ளுங்கள். சுத்தமான நாட்டு வெல்லத்தை எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல ஆர்கானிக் மஞ்சளாக 1ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
சுத்தமான வெல்லம் மற்றும் மஞ்சள் சேர்க்கும் போது அதிக பலன் கிடைத்தது விரைவில் குணமாகும். நல்ல மஞ்சளானது மூட்டுவலி, பாதவலி, வெடிப்பு ஆகியவற்றை குணப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. மூன்றாவதாக 1 டேபிள் ஸ்பூன் சுண்ணாம்பு சேர்த்து கொள்ளுங்கள்.
வெற்றிலையில் பயன்படுத்தும் சுண்ணாம்பு போதும். ஈரமான சுண்ணாம்பை பயன்படுத்தவும். சுண்ணாம்பில் கால்சியம் இருப்பதால் எழும்பு பலகீனம், எழும்பு தேய்மானம், முழங்கால் வலி ஆகியவற்றை சரி செய்கிறது. பவுடர் சுண்ணாம்பு வேண்டாம் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
துருவிய வெல்லம் 4 அல்லது 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் 1ஸ்பூன்
சுண்ணாம்பு 1 டேபிள் ஸ்பூன்
இந்த மூன்று பொருட்களையும் மேற்கூறிய அளவுகளில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
நன்றாக பேஸ்ட் போல் வரும் வரை கலக்கவும். பிறகு இதை அடுப்பில் வைத்து குறைந்த அளவு தீயில் 3 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பிறகு அடுப்பை அனைத்து விடவும். நன்றாக ஆறிய பிறகு காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
இது நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதை உங்களுக்கு எங்கு வலி இருக்கிறதோ, கை, கால், மூட்டு, குதிகால், பாதம் போன்ற எந்த இடத்தில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
மூட்டு வலியால் மிகவும் அவதிப்படுவோர், உட்காருவதற்கும், எழுவதற்கும் சிரமபடுகிறவர்கள் முதலில் வலி உள்ள இடத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து விட்டு பிறகு இதை தேய்த்து மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்த பிறகு 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு காற்றோட்டமாக விடவும். பிறகு தண்ணீரில் கழுவி விடவும்.
இதை இரவில் பயன்படுத்தினால் 20 நிமிடங்கள் வரை காற்றோட்டமாக விட்டுவிட்டு பிறகு ஒரு காட்டன் துணியை சுற்றி கொண்டு படிக்கலாம். இதை தொடர்ந்து 7 நாட்களுக்கு பயன்படுத்தினாலே போதுமானது. நாள்பட்ட வலியும் குணமாகும்.