தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

0
193
no-fee-required-electricity-regulatory-commission-notice
no-fee-required-electricity-regulatory-commission-notice

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

தற்போதைய சூழ்நிலையில்  அனைவரின் வீட்டிலும் அனைத்து மின்சாதன பொருட்களும் உள்ளது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, கம்ப்யூட்டர், ஹீட்டர் முதலிய பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவே உள்ளது. இது போன்ற அனைத்து மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்க பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

குளிர்சாதனப்பெட்டி, ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற அதிக மின்சரதேவை கொண்ட மின்சாதனங்கள் உள்ள வீடுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக  வெளியான தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில்தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்களிடையே அதிருப்தியை உண்டாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்த அறிக்கையில், ஏசி, குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர் போன்ற அதிக மின்சரதேவை கொண்ட பொருட்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவைக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் இது போன்ற கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleஇல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!