நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும்! உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு!

0
175
#image_title

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும். உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு.

நாளை முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை உணவுத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் தற்போது சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு, ஆயில் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொருட்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில பொருட்கள் அதிகமாக வழங்கப்படுவது வழக்கம்.

இதற்கு மத்தியில் நாளை முதல் ரேஷன் கடைகளில் கேழ்வரகு தானியமும் வழங்கப்படும் என்று உணவுத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளது. பிறகு படிப்படியாக கேழ்வரகு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, கொல்லு போன்ற சிறு தானியங்கள் தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் சிறு தானியமான கேழ்வரகையும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளது தமிழக அரசு.

Previous articleஎங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!
Next articleநாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!