வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?

0
162
so-many-problems-with-bleaching
so-many-problems-with-bleaching

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா? 

பெண்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினை வெள்ளைப்படுதல். வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் கருப்பை வாய், கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்பு தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான் வெள்ளைப்படுதல். இது பிறப்புறுப்பை ஈரமாகவும், ஊராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த திரவம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று மற்றும் பாலியல் நோய்கள் காரணமாக அதிகமாக சுரக்கும்.

இது உடம்பு சூட்டின் காரணமாகவும் சுரக்கும். இதனால் துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மிகவும் அதிகமாக இருக்கும். அவர்கள் இதற்காக எந்த ஒரு வைத்தியமும் செய்யாமல் இருப்பார்கள். இதனால் வெள்ளைப்படுதல் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இதற்கான எளிய வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

** முதலில் சாதம் வடித்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். சாதம் வடித்த தண்ணீரில் கீழே இருக்கும் தண்ணீராக எடுத்துக் கொள்ளவும். சூடாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சிறிதளவு சூடாக இருந்தாலே போதுமானது. அதிக சூட்டில் இதை குடிக்கக் கூடாது. சாதம் வடித்த தண்ணீர் பாதி கிளாசிற்கு கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

** அடுத்து தயிர் . வீட்டிலேயே உறை போட்ட தயிரை எடுத்துக் கொள்ளுங்கள், கடைகளில் வாங்குவதோ, பாக்கெட் தயிரோ வேண்டாம். தயிர் மிகவும் புளிப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு புளிப்புத்தன்மை இருந்தால் போதும். சாதம் வடித்த தண்ணீரோடு தயிரையும் ஒரு கிளாஸ் வரும் அளவிற்கு கலந்து கொள்ளுங்கள்.

** அடுத்தது வெந்தயம். உடல் சூட்டினால் தான் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் எனவே இது வெள்ளைப்படுதலை தடுக்கிறது.

** இப்போது சாதம் வடித்த தண்ணீர் மற்றும் தயிருடன் 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு 10 நிமிடங்கள் வெந்தயத்தை ஊற விடவும். பிறகு இதை குடித்து விடுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களுமே உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதை தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை தனித்து வெள்ளைப்படுதல் பிரச்சினையை சரி செய்யும்.