இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

0
82

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

இந்தியன் வங்கி இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக கூறியுள்ள செய்தி பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட காரணத்தால், ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொதுவான கருத்து கூறப்பட்டது.

இந்தியன் வங்கி கூறிய உண்மை நிலவரம் :

வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தணை நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதற்கான உண்மை நிலவரத்தை அகில இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் கூறியதாவது ;

இந்தியன் வங்கி பணப்பரிவர்த்தணையில் 2000 நோட்டுகள் தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்தப்படும், ஏடிஎம் -களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும், ஏடிஎம் களில் அதிகமான தொகையாக பணம் எடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டே வருகிறது. இதனால் சில்லறைக்காக வங்கிக்குள் நுழைகின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கும் , மக்களுக்கும் நேரம் வீணாகிறது. ஏடிஎம் மிஷன் கொண்டு வந்ததே வங்கியின் பணப்பரிவர்த்தணை நேரத்தை குறைப்பதற்குத்தான். சில்லறை சிக்கலுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினார்.

இனி வங்கி ஏடிஎம் களில் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே நிரப்பப்படும். 2000 ரூபாய் நோட்டுக்கான ஏடிஎம் டிரேக்களில் இனி பணம் நிரப்புவதில்லை என்பதையே பலர் திரித்து கூறுவதாக தெரிவித்தார்.