ஆய்சுக்கும் கால்சிய குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

0
175
#image_title

ஆய்சுக்கும் கால்சிய குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் பல விதமான ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். ஆகையால் கால்சியத்தை நாம் நிச்சயம் அதிகரிக்க வேண்டும். எப்படி கால்சிய சத்தை அதிகரிக்கச் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கேழ்வரகு மாவு- 1 கப்

2. கருப்பு எள்- 100 கிராம்

3. பாதாம்- 10-15

4. பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் கேழ்வரகு மாவை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில் பாலை விட மூன்று மடங்கு கால்சியம் நிறைந்துள்ளது.

இதன்பின், கருப்பு எள் மிதமான சூட்டில் நன்கு வெடித்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளில் அமினோ ஆசிட் நிறைந்து காணப்படுகிறது.

பெருஞ்சீரகம் ஜீரணத்திற்கு உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

முதலில் மிக்ஸி ஜாரில் கருப்பு எள், பாதாம், பெருஞ்சீரகம் போன்றவற்றை அரைத்து அதனுடன் கேழ்வரகு மாவையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து தினமும் பயன்படுத்தி வரலாம்.

பயன்படுத்தும் முறை:

நன்கு கொதிக்க வைத்த பாலை சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் கலவையை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டிற்கு வந்தபின் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வருகையில் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கிறது.