சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!

0
126
#image_title

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்.

கோவை NH ரோட்டை சேர்ந்தவர் அப்துல்சமது(62). இவர் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஆன்லைன் மூலமாக வீட்டு உபயோக பொருள் வாங்கியுள்ளார்.

சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அப்துல்சமதை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அந்த நபர் நீங்கள் வாங்கிய பொருட்களுக்காக உங்களுக்கு சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் அந்த சொகுசு கார் கிடைக்க, கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய அப்துல் சமது பல்வேறு கட்டங்களாக 12 லட்சம் பணத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.

ஆனால் பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் சொகுசு கார் வழங்கப்படாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல்சமது இது குறித்து கோவை மாநகர சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றன.