நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

0
181
#image_title

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் இருவர் கைது. மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சங்கமம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப கேட்கும் போது, நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை.

எனவே தாங்கள் ஏமாறப்பட்டதாக உணர்ந்து பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்டோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த நிறுவனத்தை சேர்ந்த ராமநாதன் (55), ராஜேஷ் (43) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Previous articleகட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!
Next articleதமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!