தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Photo of author

By CineDesk

தங்கம் விலை இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே தற்போது மாறி  உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றமாகவே உள்ளது.

நேற்று முன்தினம்,  தங்கத்தின் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை அடைந்தது. நேற்று மேலும் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு  விற்கப்பட்டது.

தங்கம், கடந்த 3 நாட்களாகவே பெரும் விலையேற்றத்தை அடைந்தது வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்து ஒரு பவுன் ரூ.45 ஆயிரத்து 536 க்கு விற்கப் படுகிறது. கிராமிற்கு ரூ.83 குறைந்து ஒரு கிராம் ரூ.5,692 க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையிலும் மாற்றம் உள்ளது. கிலோவிற்கு ரூ.1300  குறைந்து  ஒரு கிலோ வெள்ளி ரூ.82,400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40 க்கு விற்கப்படுகிறது.