சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

Photo of author

By Rupa

சற்றுமுன்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை.. தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நியாய விலை கடையில் பல புதிய மாற்றங்கள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு என ஆரம்பித்து தற்பொழுது பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை.

கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். ஆனால் இம்முறை கரும்பு கூட வழங்காமல் மறுத்திருந்த நிலையில் பல கண்டனங்களுக்குப் பிறகு தான் அதனையும் வழங்கினர்.மேலும் புதிய திட்டமாக இவர்கள் ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோட் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறையை  கொண்டு வந்துள்ளனர். இதனால் கால விரயம் ஆவது குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கும் திட்டம் கடந்த வாரம் முதல் அமல்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தேங்காய் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மற்றொருபுறம் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று இது குறித்து அறிவிப்பு ஒன்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். அதில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி இந்த மாவட்டங்களுக்கு மட்டும் முதலில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசு பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெயை வழங்குகிறதா அல்லது பாமாயிலுடன் சேர்த்து இதர எண்ணெய் வகைகளையும் வழங்குகிறதா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தெரியாததால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர்.