மாணவர்களின் கவனத்திற்கு, கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு!
நேற்று அதாவது மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் மாநிலத்திலேயே 600க்கு 600 என்று முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. இதையடுத்து கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் உலகி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் உலகி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாணவர்கள் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அரசு கலைக் கல்லூரியில் இதற்கென்று உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ள மாணவர்கள் கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை சந்தேகங்களுக்கு அணுகலாம். ஒரு விண்ணப்பத்தை வைத்து ஒரு கல்லூரியில் எத்தனை துறைகளுக்கு வேண்டுமானாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ” என்று கூறியுள்ளார்.