இந்த ஒரு பல் பூண்டு இருந்தால் இரத்த கொதிப்பை அப்படியே குறைக்கலாம்!!

0
146
#image_title
இந்த ஒரு பல் பூண்டு இருந்தால் இரத்த கொதிப்பை அப்படியே குறைக்கலாம்!!
நம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு என்பது இருக்கும். இந்த இரத்தக் கெதிப்பை கட்டுப்படுத்த மாத்திரையை எடுத்துக் கொள்வோம். ஆனால் இனி மாத்திரை தேவையில்லை. இரத்தக் கொதிப்பை குறைக்க ஒரு பல் பூண்டு மட்டுமே போதும். இரத்தக் கொதிப்பை குறைக்க பூண்டுகளை வைத்து எவ்வாறு மருந்து தயார் செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* பூண்டு
* சீரகம்
* பால்
தயார் செய்யும் முறை…
முதலில் பூண்டை எடுத்து உங்களுக்கு எத்தனை பூண்டு பல் தேவையோ அத்தனை பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இந்த தோல் உரித்த பூண்டு பற்களை ஒரு உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும். தட்டிய பிறகு இதில் சிறிதளவு சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும். சீரகத்தை சேர்த்து நன்கு இடிக்கவும்.
 நன்கு இடித்து பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு இடிப்பதை நிறுத்திவிட்டு இதை எடுத்துக் கொள்ளவும். இதை அப்படியே சாப்பிட முடியாது. இது அதிக அளவு காரமாக இருக்கும்.
அதனால் காய்ச்சிய பால் ஒரு டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள பூண்டு சீரக விழுதை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். சுவைக்காக இதில் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும். பிறகு இதை அப்படியே குடித்தால் இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு அனைத்தும் குறையத் தொடங்கும்.