7 நாள் இதை செய்யுங்கள்.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!!
மூட்டு வலியால் நாம் தினமும் வேதனையை அனுபவித்து வருவோம். மூட்டு வலி என்றால் கால் மட்டுமில்லாமல் கைகளில் இருக்கும் மூடுகளும் சேரும். இந்த மூட்டு வலிகளை முழுவதுமாக எவ்வாறு குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
மூட்டு வலியை சரி செய்ய இந்த பதிவில் ஒரே ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி மருந்தை தயாரித்து பயன்படுத்த போகிறோம். அந்த ஒரு பொருள் வேப்ப எண்ணெய் மட்டும் தான். இந்த வேப்ப எண்ணெயை வைத்து நம் உடலில் இருக்கும் மூட்டுகளின் வலியை முழுவதுமாக குணப்படுத்த முடியும்.
இந்த வேப்ப எண்ணெய்யை மூட்டு வலிக்கு பயன்படுத்தும் முறை…
ஒரு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பிறகு ஒன்றறை ஸ்பூன் வேப்ப எண்ணெய்யை எடுத்து தண்ணீரில் கலக்காமல் தண்ணீரின் மேல் வைத்து சூடுபடுத்த வேண்டும். 5 நிமிடம் வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து இளஞ்சுடாக இருக்கும் இந்த எண்ணெய்யை மூட்டுகளில் முழங்கால்களில் முழுவதுமாக தேய்த்துவிட வேண்டும்.
வலிகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த எண்ணெய்யை நன்கு அழுத்தி தேய்த்து விடவேண்டும். 30 நிமிடம் கழித்து ஒரு துணியை எடுத்து மூட்டுகளில் முழங்கால்களில் தேய்த்த அந்த எண்ணெய்யை நன்கு துடைத்துக் கொள்ளவும். பிறகு குளித்து விட வேண்டும். இதை தொடர்ந்து ஒருவாரம் செய்தால் மூட்டு வலி, முழங்கால் வலி எல்லாம் குறையத் தொடங்கும். மேலும் மூட்டு வலி, முழங்கால் வலி முழுவதுமாக மறைந்து விடும். கடுமையான மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் இதை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் மூட்டு வலி, முழங்கால் வலி முழுவதுமாக குறைந்துவிடும்.