கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்!!

0
196
#image_title
கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்!
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் பேனா சின்னத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து மீனவர்கள் சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று கடலில் பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகின்றது. இதையடுத்து நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில்  பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Previous article500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!
Next articleராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!