வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

0
250
#image_title

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை, மூட்டு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடியது. மூட்டு வலி இருக்கும் போது படி ஏற முடியாது, நீண்ட தூரம் நடக்கும் போது மூட்டில் வலி, நடக்கும் போது மூட்டில் ஏற்படும் சத்தம் போன்றவை இருக்கும்.

வயதாவதாலும், எலும்பு தேய்மானத்தினாலும், உடல் பருமனாலும் அதாவது அதிக எடை மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  இந்த மூட்டுகளின் வலிகளை போக்கும் ஒரு இயற்கையான, எளிய வீட்டு முறை வைத்தியத்தை பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து  கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தண்ணீர் சூடானவுடன் அதில் சிறிதளவு கொடம் புளியை போடவும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த புளியில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு  இந்த புளியை வைத்து ரசம், குழம்பு போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.

அடுத்ததாக இதில் 2 வெண்டைக்காயை கட் செய்து போடவும். இந்த வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்பு தன்மை அந்த சுடுதண்ணீரில் இறங்கும். இந்த பிசுபிசுப்பு தன்மையானது எலும்பு மஜ்ஜைகளை பாதுகாக்கிறது. அடுத்ததாக இதில் சிறிதளவு ஆளி விதைகளை ஒரு 10 நிமிடம் ஊறவைத்து இதனுடன் சேர்க்கவும்.

ஆளி விதையில் ஒமேகா 1, ஒமேகா 6 சத்துக்கள் இருப்பதால், எலும்புகளுக்கும், எலும்பு மஜ்ஜைகளுக்கும் பாதுகாப்பை கொடுக்கிறது. இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் புளி, வெண்டைக்காய், ஆளி விதை இந்த மூன்றின் பிசுபிசுப்பு தன்மையும் தண்ணீரில் நன்றாக இறங்க வேண்டும்.

இதில் தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். பிறகு இதை வடிகட்டி, வெதுவெதுப்பாக குடித்து வர மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கம், எலும்பு மஜ்ஜைகளில் உள்ள வீக்கம், மூட்டு தேய்மானம் போன்றவை குணமாகும்.

Previous articleஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!!
Next articleஇனி டாக்டர் பாக்க தேவையில்லை!! இதை சாப்பிட்ட மூன்றே நாளில் உங்கள் ஹீமோகுளோபின் கிடுகிடுவென உயரும்!!