வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் வாய் துர்நாற்றம் வரவே வராது!!
வாய் துர்நாற்றம் என்பது வாயோடு தொடர்புடையது அல்ல. வயிற்றில் பிரச்சினைகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் உண்டாகும். வாய்புண், பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் குடலில் புண், அல்சர், மலச்சிக்கல், கல்லீரல் வாய் துர்நாற்றம்
துர்நாற்றம் வரும். இந்த வாய் துர்நாற்றத்தை போக்க கூடிய மருத்துவ குறிப்பை பார்க்கலாம்.
1 ஏலக்காய்
4 புதினா இலைகள்
பச்சை கற்பூரம் (மிளகு அளவு)
இந்த மூன்றையும் எடுத்து வாயில் போட்டு வாய் முழுவதும் இருக்குமாறு நன்றாக 15 நிமிடங்களுக்கு குதப்பவும். பிறகு அதை துப்பி விடவும். அதன் பிறகு ஒரு 10 மில்லி நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி ஒரு 15 நிமிடத்திற்கு ஆயில் புல்லிங் செய்யவும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் பிரச்சினைகள் வரவே வராது.
ஆனால் வாய் துர்நாற்றம் என்பது எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்து முதலில் அதை சரி செய்ய வேண்டும். அதாவது, பல் சொத்தையினால் வருகிறது என்றால் அதை சரி செய்ய வேண்டும். இப்படி என்ன காரணத்தினால் வாய் துர்நாற்றம் வருகிறதோ முதலில் அதை சரி செய்ய வேண்டும்.