பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!!

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!!

தமிழ் திரைபடத்துறையில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் லைகா. 2014ம் ஆண்டு முதல் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படத்தை தயாரித்து உள்ளது.  விஜயின் கத்தி, ரஜினியின் தர்பார், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், தனுசின் வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை தயாரித்துள்ளது.

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த திரைப்படமும் நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. மேலும் கமலின் இந்தியன் 2, ரஜினியின் லால் சலாம், அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர், காலை 8 மணி முதல் லைகா நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தி. நகர், அடையார், காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில், துணை ராணுவத்தின் உதவியுடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.