கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

0
235

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன.

வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்தது.

டெல்லியின் காவல்துறை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் டெல்லி முதல்வர் தங்களால் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என சொல்லியுள்ளார். கலவரம் மேலும் பரவாமல் இருக்க வடகிழக்கு டெல்லி பகுதிகளான மஜ்பூர், கர்தாம்பூரி, தயால்பூர், சாந்த்பாக் போன்ற இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘டெல்லிக்கு ராணுவத்தை அனுப்புங்கள். போலீஸ்காரர்களால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleவரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?
Next articleமீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?