ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வைத்து கொண்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த உயர்வானது 1.4.2023 என்ற தேதியில் இருந்தே செயல் படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயன் பெறுவார்கள்.
மேலும் ஏப்ரல் மாத அகவிலைப்படி தொகையை பணம் இல்லாத பரிவர்த்தனை மூலம் அதாவது மிண்ணனு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வுக்கான பட்டியல்கள் கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பள கணக்கு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.
மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதால், ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்க வேண்டியதை கணக்கிடுவது, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் பொறுப்பாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.