மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

0
96
students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science
students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டபடிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. நேற்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் அப்ளை செய்துள்ளர்கள்.இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தியும்  உள்ளனர்.

பி.காம் படிப்பில் விண்ணப்பிக்க சென்னை மாநிலக் கல்லூரியில் குறிப்பாக 40 இடங்களில் சேர 6200 மாணவர்களும், ராணிமேரி  கல்லூரியில் உள்ள 60  இடங்களில் விண்ணப்பிக்க 4500  மாணவிகளும், பிகாம் சிஏ படிப்பில் சேர்வதற்க்கு கோவையில் அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களில் 3400 பேரும், வியாசர்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிகாம் படிப்பில் சேர 70 இடங்களில் 3478 பேரும்,  பாரதி பெண்கள் கல்லூரியில் 140  இடங்களில் 3421  பேரும் விண்ணப்பித்தியுள்ளனர்.

மேலும் இதர துறையில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் விண்ணப்பிக்க பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். மாணவர் சேர்க்கையில் தமிழ்மொழி பட்டபடிப்புக்கும், தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டும் தனித் தனியாக தரவரிசை பட்டியலில் பிரிக்கப்படும்.

ஆங்கில மொழி பட்டபடிப்புகளுக்கும் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை படிப்புகளுக்கும் மேலும் நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றுடம் முடிவடைய இருந்த விண்ணப்ப பதிவானது நீட்டிக்கப்படும் என பொன்முடி கூறியுள்ளார்.