வெரிகோஸ் வெயினை இனி வீட்டிலேயே குணப்படுத்தலாம்!! இதோ ஈசி டிப்ஸ்!!

Photo of author

By Sakthi

வெரிகோஸ் வெயினை இனி வீட்டிலேயே குணப்படுத்தலாம்!! இதோ ஈசி டிப்ஸ்!!

 

வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல் நோயை முழுவதுமாக எவ்வாறு குணப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இந்த வெரிகோஸ் நோய் அதாவது நரம்பு சுருட்டல் நரம்பு முடிச்சு நோய் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவு வருகின்றது. இந்த வெரிகோஸ் நோய் ஏற்படுவதற்கு காரணம் அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று வேலை செய்வதுதான். இந்த நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த உதவும் மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய முதலில் கருப்பு உலர் திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உலர் கருப்பு திராட்சையில் இருக்கும் விதைகள் தான் கால்களில் நரம்புகளில் உள்ள அசுத்த இரத்தத்தை வெளியேற்றுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், நரம்பு புடைப்புகளை சரி செய்யும் தன்மையும் இதற்கு உள்ளது.

 

இதனால் கருப்பு உலர் திராட்சை வாங்கும் பொழுது விதைகள் இருக்கும்படி வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த கருப்பு உலர் திராட்சையில் நிறைய சத்துக்கள் உள்ளது. விட்டமின் பி, விட்டமின் சி, கரோட்டின், மெக்னீசியம், போலிக் ஆசிட், புரோட்டீன்கள், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளது.

 

மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் 10 முதல் 15 கருப்பு உலர்ந்த திராட்சைகளை ஒரு முறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உலர் கருப்பு திராட்சைகளை ஒரு டம்ளரில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

 

இதை காலை நேரத்தால் வாயை சுத்தம் செய்து விட்டு ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு அப்படியே சாப்பிடலாம். இதை சாப்பிடுவது கஷ்டமாக இருந்தால் ஒரு மிக்சி ஜாரில் இந்த உலர்ந்த கருப்பு திராட்சையை போட்டு ஊறவைத்த அதன் தண்ணீரையும் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.

 

இதை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல், நரம்பு முடிச்சு நோய் குணமடைய தொடங்கும்.