இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது-குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது.
இந்திய பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அஸ்ட்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த குவாட் மாநாடு முதலில் அஸ்த்ரேலியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது அஸ்ட்ரேலிய பயணத்தை இரத்து செய்ததை தொடர்ந்து குவாட் மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா விலையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோதி உலகளாவிய நன்மை மக்களின் நலன் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான தொடர் முயற்சிகளை வார்டு நாடுகளின் மாநாடு தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் 2024 ம் ஆண்டு குவாட் நாடுகளின் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலைத்தன்மை வளர்ச்சி போன்றவற்றின் முக்கிய தளமாக குவாட் நாடுகளில் மாநாடு உருவாகி இருப்பதாக தெரிவித்தவர் உலகளாவிய வர்த்தகம் புதுமை வளர்ச்சி போன்றவற்றின் எஞ்சினாக குவாட் நாடுகள் உள்ளது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் அந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது என பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் வார்டு நாடுகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.