ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

0
218
#image_title
ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திங் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றது.
15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக நடப்பு ஐபிஎல் தெடரின் இறுதிப் போட்டிக்கு சென்றது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி கூறியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணியின் வீரர்களின் ஆட்டத்தை பற்றி பேசிய தோனியிடம் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே அவர்கள் நீங்கள் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று கேட்டார்.
அந்த கேள்விக்கு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அவர்கள் “அது பற்றி எனக்கு தெரியவில்லை. அதற்கு இன்னும் 8லிருந்து 9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை எடுக்க வேண்டும். ஒன்று மட்டும் சொல்கிறேன். மைதானத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி மைதானத்திற்கு வெளியே இருந்தாலும் சரி எதுவானாலும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுவேனா அல்லது வேறு எதாவது பொறுப்பில் இருப்பேனா என்று தெரியவில்லை. எப்படி எதுவாக இருந்தாலும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாகத்தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
ஒய்வு குறித்து சென்னை கேப்டன் எம்.எஸ் தோனி அவர்கள் கூறியதை வைத்து பார்த்தால் அடுத்த வருடம் நிச்சயமாக விளையாட மாட்டார் என்று தெரிகிறது. சி.எஸ்.கே அணியில் வேறு எதாவது பொறுப்பில் இருக்க வாய்ப்பு உள்ளது.
Previous articleதமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!
Next articleவெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!