புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !!

0
299
#image_title

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பிற்பகல் 12 மணியளவில் திறக்கப்பட இருக்கிறது.

முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் 64ஆயிரத்து 500 சதுர அடி அளவில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கால கட்டத்திலும் கூட பணிகள் தொய்வு இல்லாமல் முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 12 மணி அளவில் இதை திறக்க வைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் திறக்கும் விவாதமாக பல்வேறு சர்ச்சை கிளம்பி இருக்கிறது.குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் பிரதமர் அல்ல என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

பாரதிய ஜனதாவின் அமித் மால்வியா தனது ட்விட்டரில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்கிறார். அன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள். இந்தியாவின் மகத்தான மகன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், சாவர்க்கரின் பிறந்த நாளன்று புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!
Next articleவரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!