பகுதி நேர வேலை என்று வந்த விளம்பரம்! 46 லட்சம் மோசடி செய்த இளைஞர்!
தூத்துக்குடியில் ஒருவரிடம் பகுதி நேர வேலை தருவதாக ஆசை காட்டி 46 லட்சம் பணத்தை செல்போன் செயலி மூலம் இளைஞர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் சின்னமணி நகரை சேர்ந்த தங்கதுரை அவர்கள் தூத்துக்குடியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தித் வேலை பார்த்து வந்தார். இவரது செல் போனில் பகுதி நேர வேலை தேவையா என்று விளம்பரம் வந்துள்ளதை அடுத்து அவருக்கு மேசஜ் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தங்கதுரையிடம் மெசேஜ் அனுப்பிய நபர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் இலாபத்தை அதிகரித்து அதன் மூலம் நீங்கள் கமிஷன் பெற முடியும் என்று தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து முதலில் 1100, 1500 என்று தங்கதுரையின் வங்கிக் கணக்கிற்கு தொகையை அனுப்பியுள்ளனர். இதையடுத்து அதிக கமிஷன் வேண்டும் என்றால் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து தங்கதுரை அவர்களும் இந்த மோசடி நிறுவனம் கூறியதை போல பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தவணைகளாக 46 லட்சத்தை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார்.
பின்னர் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தங்கதுரை அவர்கள் இந்த மோசடி தொடர்பாக தேசிய சைபர் கிரைம் பிரிவு தளத்தில் புகார் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் போலிஸ் சூப்பரண்டு பாலாஜி சரவணன் அவர்கள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலிசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரனை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தங்கதுரையிடம் பணத்தை மோசடி செய்தது நெல்லை மாவட்டம் மானூர் குப்பனபுரம் பகுதியை சேர்ந்த எலியாஸ் பிரேம்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் மோசடி செய்த எலியாஸ் பிரேம்குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எலியாஸ் பிரேம்குமார் அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ததும் அந்த வங்கி கணக்குகளில் சுமார் 25 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமாரிடம் இருந்து லேப்டாப், 9 சிம் கார்டுகள், செல்போன், 61 ஏ.டி.எம் கார்டுகள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தூத்துக்குடி சைபர் கிரைம் தனிப்படை போலிசாரை எஸ்.பி பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார். இதைப்பற்றி தூத்துக்குடி எஸ் பி பாலாஜி சரவணன் “இது போல பல மோசடி கும்பல்கள் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்களை மோசடி செய்து வருகின்றனன். இது போல எதாவது அழைப்பு வந்தால் பொத்து மக்கள் யாரும் நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.