தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு  1 முதல் 12  ஆம் வகுப்பு வரை  கோடை விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின்  பொது நலன் கருதி  பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில்  பொது மக்களின் கோரிக்கைய ஏற்று  திருச்சியில் நடந்த மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கிருந்த நிருபர்களை சந்தித்தார்.

தமிழக முதல்வர் அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்யவேண்டும்.முதல்வர் அவர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.