தமிழக பள்ளிகளில் பாடப்பிரிவுகள் ரத்து!! கட்டாய இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள்!!
தமிழத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகியது. இதில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் அதிகளவில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து 11ம் வகுப்பில் சேர்வது மகிழ்ச்சியான விசயமாக உள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில், 11ம் வகுப்பில் உள்ள 4 முக்கியமான பாடப்பிரிவுகளை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வேளாண் அறிவியல், துணி நூல் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என நான்கு பாடப்பிரிவுகள் ரத்து செய்ய படுவதாகவும், இந்த பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த மாணவர்கள் வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பாடப்பிரிவுகளில் உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பாடப்பிரிவுகள் ரத்து செய்வது குறித்து நெல்லை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மனோகரன் கூறியதாவது. 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேளாண் அறிவியல் பாடத்திற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது வருகிறது.
இந்த படிப்பை படித்து பல மாணவர்கள் உயர் கல்விக்கு சென்றுள்ளனர். இதில் இந்த ஆண்டு திண்டுக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இந்த பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வேளாண் அறிவியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பது போல் உள்ளது என்றும், இந்த பாடப்பிரிவை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ஆனால் இந்த பாடப்பிரிவுகள் ரத்து செய்வது தொடர்பாக இது வரை எந்த அலுவலக ரீதியான உத்தரவும் வரவில்லை என கூறப்படுகிறது.