9 ஆண்டுகால ஆட்சி வெற்றிகரமாக நிறைவு! பாஜக கட்சிக்கு 9 கேள்வி கேட்ட காங்கிரஸ் கட்சி!!

0
151
#image_title
9 ஆண்டுகால ஆட்சி வெற்றிகரமாக நிறைவு! பாஜக கட்சிக்கு 9 கேள்வி கேட்ட காங்கிரஸ் கட்சி!
பாஜக கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு 9 கேள்விகள் கேட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்தியில் ஆட்சியை அமைத்தது. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதற்கு பாஜக கட்சி 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது நடைபயணத்தின் பொழுது எழுப்பிய முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு 9 கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பவன் கெரா, சுப்ரியா ஸ்ரீனேட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அந்த பேட்டியில் பாஜக கட்சித் தலைவர் இதே நாளில்(மே 26) 2014ம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களுக்கு 9 கேள்விகளை கேட்கிறோம்” என்று பேட்டி அளித்தார்.
காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு எழுப்பிய 9 கேள்விகள்;
கேள்வி 1
இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. வேலையில்லாமை அதிகரித்து வருகிறது ஏன்?
கேள்வி 2
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுவது ஏன்?
கேள்வி 3
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பொதுச் சொத்துக்களை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை செய்வது ஏன்?
கேள்வி 4
மூன்று வேளாண்மை சட்டங்கள் ரத்தான போது விவசாயிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை சட்டப்பூர்வமாக ஆக்காதது ஏன்? இந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிக்காதது ஏன்?
கேள்வி 5
மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்.ஐ.சியிலும், பாரத் ஸ்டேட் வங்கியும் சேமிக்கிறார்கள். அவர்கள் சேமிக்கும் பணத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நண்பர் அதானி பயன் பெறும் வகையில் பணையம் வைப்பது ஏன்?
கேள்வி 6
இந்தியர்களை கஷ்டப்பட வைப்பது ஏன்? திருடர்களை தப்பித்து ஓட வைப்பது ஏன்? பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழல்கள் பெருகியும் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்?
கேள்வி 7
2020ம் ஆண்டில் சீனா எந்த ஒரு இந்திய பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று நீங்கள் நற்சான்று அளித்தீர்கள். அதன் பிறகும் சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வது ஏன்?
கேள்வி 8
தேர்தல் சமயங்களில் ஆதாயத்திற்காக தொடர்ந்து வெறுப்பா அரசியல் செய்யப்படுகிறது அது ஏன்? தொடர்ந்து சமூகத்தில் பயம் நிறைந்த சூழலை உண்டாக்குவது ஏன்?
கேள்வி 9
பெண்கள் மீதான வன்கொடுமைகள் மீது அமைதி காப்பது ஏன்? தலித்துக்கள்,
 பழங்குடியினர், சிறுபாண்மையினர், இதர பிற்படுத்தப்பட்டோர்கள் மீது ஏற்படும் வன்கொடுமைகளை பார்த்தும் அமைதியாக இருப்பது ஏன்? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் “பிரதமர் மோடி அவர்கள் தனது மௌனத்தை கலைத்துக் கொண்டு இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.