பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்?

Photo of author

By CineDesk

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்?

பிரபல யூடியூபர் முகமது இர்பான். இவர் சென்னை சேர்ந்தவர். இர்பான்ஸ் வியூ என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவரது சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது சேனலில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை என அனைத்து உணவகங்களில் உள்ள உணவுகளின் வகைகளையும், அதன் சுவைகளை பற்றியும் பதிவிடுவார்.

சின்ன சின்ன உணவகங்களை கூட தேடிப் பிடித்து அந்த உணவகங்களின் சிறந்த உணவுகளை பதிவிடுவார். மேலும் அரசியல் பிரபலங்களையும் பேட்டி எடுத்து போடும் வீடியோக்களையும் மக்கள் ரசித்து வருகின்றனர். இவருக்கு தற்போது தான் திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்களும் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இவரின் கார் மோதி பெண் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அவரது மகளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அப்போது மறைமலை நகர் அலுவலகம் அருகே சாலையை கடக்கும் போது வேகமாக வந்த கார் பத்மாவதி மீது மோதியது. கார் மோதியதால் தூக்கி எறியப்பட்ட பத்மாவதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பத்மாவதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கார் யூடியூபர் இர்பானுடையது என்பதும், இதை ஒட்டி வந்தது அவரின் டிரைவர் அசாருதீன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த காரில் இர்பான் இருந்தாரா? என்பது குறித்து பரனூர் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.