ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!!

0
279
#image_title
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! கோப்பையை வெல்லப்போவது குஜராத்தா அல்லது சென்னையா!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்னேறும். அதன்படி ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், க்ருணால் பாண்டியா தலைமையகலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் குவாலிபையர் சுற்றில் விளையாடியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் சுற்றுக்கு சென்றது.
மூன்றாம் நான்காம் இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடியது. இதில் வென்ற மும்பை இந்தியன் அணி இரண்டாம் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாம் குவாலிபையர் சுற்றில் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னறியது.
நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. தோற்கும் அணிக்கு 13 கோடி ரூபாய் வழங்கவுள்ளது. ரசிகர்களை கவறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Previous articleஇதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!
Next articleசீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்!!