Breaking News, Sports, T20 World Cup

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!!

Photo of author

By Sakthi

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!
ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகின்றது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
ஜூன் 7ம் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 13.2 கோடி பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் பெயர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் நடுவர்களின் பட்டியல்;
களத்தின் நடுவர்கள்:
கிறிஸ் கேப்னி – நியூசிலாந்து
ரிச்சர்ட் இல்லிங்வொர்த் – இங்கிலாந்து
டிவி நடுவர்:
ரிச்சர் கெட்டில்பொரோக் – இங்கிலாந்து
நான்காவது நடுவர்:
குமார் தர்மசேனா – இலங்கை
போட்டி ரெப்ரி:
ரிச்சி ரிச்சர்ட்சன்.

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!! 100% உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!