அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!!
கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் பட்டது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் கடந்த 27ம் தேதி இந்த யானை மங்கள தேவி கோவில் வழியாக தமிழக வனப்பகுதியில் இருந்து கம்பம் நகருக்குள் நுழைந்தது.
இதனால் கம்பம் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. யானை ஊருக்குள் புகுந்ததால் அதனை மயக்க ஊசி போட்டுப் பிடிக்கலாம் அல்லது கும்கி யானைகளை வரவழைத்து பிடிக்கலாம் என வனத்துறையினரும், காவல் துறையினரும் முடிவு செய்தனர். மேலும் 3 கும்கி யானைகள் வரவைழக்கப் பட்டு தாயார் நிலையில் உள்ளது.
யானை தினமும் பல கிலோமீட்டர் சுற்றிக் கொண்டிருப்பதால் அதை விரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். ஆனாலும் தொடர்ந்து யானையை கண்காணித்துக் கொண்டு இருகின்றனர். யானை ஊருக்குள் புகுந்த அன்று பொதுமக்கள் அதை பார்த்து பயந்து ஓடினர். அப்போது அந்த கூட்டத்தில் பால்ராஜ் என்பவரை யானை தாக்கியது.
அவர் உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். யானையை சீக்கிரமாக பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.