விந்தணு உற்பத்தி பெருக.. இந்த 3 யை ஊற வைத்து சாப்பிடுங்கள்!! 

Photo of author

By Sakthi

விந்தணு உற்பத்தி பெருக.. இந்த 3 யை ஊற வைத்து சாப்பிடுங்கள்!!

இந்த காலகட்டத்தில் மக்களின் மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தினால் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். சத்துள்ள ஆகாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் பாதி அளவு மருந்துகள் தான் உள்ளது.

அந்த வகையில் இந்த காலகட்டத்தில் இயற்கையாக விளையும் மாம்பழம் முதல் தர்ப்பூசணி பழம் வரை கலப்படம் வந்துவிட்டது. அதனை எல்லாம் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என கூறும் அளவிற்கு பாடம் எடுக்க ஆரம்பித்தது விட்டனர். இவ்வாறு மக்கள் தற்பொழுது ரசாயனம் கலந்த உணவுகளை எடுக்க ஆரம்பிப்பதால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைய ஆண்கள் 40% பேர் சந்திப்பது ஆண்மை குறைவு சம்பந்தமான பிரச்சினை தான். இதனால் குழந்தை பெற உடனடியாக பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அந்த வகையில் மருந்து மாத்திரை இன்றி வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களை அதிகரிக்க முடியும்.

 

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டை கடலை

நிலக்கடலை

வால்நட்

 

கருப்பு கொண்டை கடலையில் நார் சத்து போலிக் ஆசிட் என அனைத்தும் உள்ளது.

பாதாம் முந்திரி பிஸ்தா போன்ற நட்ஸ்களை விட அதிக அளவு சத்து கொண்ட பொருள் நிலக்கடலை தான்.

அதேபோல வால்நட்டின் ஒமேகா 3 அதிக அளவில் உள்ளது. அது மட்டும் இன்றி ஆண்களின் விந்து குறைபாடு சரி செய்ய வால்நட் ஓர் சிறந்த பொருள்.

 

செய்முறை:

கருப்பு கொண்டை கடலை மற்றும் நிலக்கடலை இவை அனைத்தையும் ஒரு கைப்பிடி அளவு சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு முதல் மூன்று வால்நட் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின்பு மறுநாள் காலையில் இது நன்றாக ஊறி இருக்கும். இதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு சாப்பிட்டு வர உடல் நல்ல மாற்றத்தை காண முடியும்.

விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு மூட்டு வலி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல தீர்வளிக்கும். அதேபோல இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. உணவு சாப்பிட்ட பின்பு கூட இதனை சாப்பிடலாம்.