அரசியலில் நுழைய விஜயின் யுக்தி!! மாணவர்கள் மூலம் வேலையை ஆரம்பிக்க திட்டம்!!

Photo of author

By Rupa

அரசியலில் நுழைய விஜயின் யுக்தி!! மாணவர்கள் மூலம் வேலையை ஆரம்பிக்க திட்டம்!!

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய போகிறார் என்று அவரது சுற்று வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் தற்போது தான் அதற்கான முதல் படியை எடுத்து வைத்து தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது தலைவா உள்ளிட்ட படங்கள் வெளியிட முடியாமல் இவருக்கு பெரும் சிக்கலை அளித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவில் இவர் மட்டும் இன்றி கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் களத்தில் இறங்க முயன்றனர்.

இவர்களை எதிர்த்து தளத்தில் இறங்க விரும்பாததால் விஜய் சற்று மௌனம் காத்தே வந்தார். ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியது, விஜய்க்கு ஒரு பாதை வகுத்துக் கொடுத்தது போல் ஆகிவிட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்டாயம் போட்டியிட வாய்ப்புள்ளதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர். அந்த வகையில் தான், தற்பொழுது சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அன்னதானம் போடுவது என அனைத்தையும் தீவிரமாக தொடங்க ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து ஊக்கத் தொகையை விஜய் வழங்குவதாக அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில் வரும் 17ஆம் தேதி ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று மாணவர்கள் என்ற அடிப்படையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக  மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தற்பொழுது கூறியுள்ளனர்.

மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவது, சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அன்னதானம் போடுவது என்ற விஜயின் இந்த செயல்பாட்டால் அரசியலில் நுழைய  சிறு சிறு வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்போது வரை குரல் கொடுக்கவில்லை.

ஊக்கத்தொகை வழங்குவதாலோ அன்னதானம் போடுவதாலோ இங்கு எதனையும் மாற்ற முடியாது அதற்கு மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். பரிசுப் பொருட்கள் ஊக்கத்தொகை போன்றவற்றின் மூலம் ஆட்சி அமைத்து விடலாம் என்று விஜய் நினைத்தால் அது முற்றிலும் தவறான எண்ணம் என பலரும் கூறுகின்றனர்.