மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Date:

Share post:

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள்  ஐ.டி.ஐ மற்றும் சுயநிதி தனியார் நிறுவனங்களின் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

மேலும்  மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கு உதவிட உதவி செய்யும் வகையில்  மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும்  தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று புதன்கிழமை கடைசி நாள் ஆகும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மற்றும் தேவையான விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்  பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...