Breaking News, Education, State

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Photo of author

By Rupa

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 13இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதிவரை  நடத்தப்பட்டன.நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வெளியாகின.இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்வில்,தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதும் மாணவர்கள் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி புதன்கிழமை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.இத்தேர்வு ஜூன்  19 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 26 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தனித்தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஜூன் 19 ஆம் தேதி மொழிப்பாடம், 20 ஆம் தேதி ஆங்கிலம் என தொடர்ந்து  26ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! 

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை!