ஆட்டுக்கறி உரித்து எவ்வளவு நேரத்தில் வாங்க வேண்டும்!! எப்பொழுது சமைக்க வேண்டும்!!

0
168
#image_title

ஆட்டுக்கறி உரித்து எவ்வளவு நேரத்தில் வாங்க வேண்டும்!! எப்பொழுது சமைக்க வேண்டும்!!

பொதுவாக நாம் வாங்கும் ஆட்டுக்கறியை எவ்வளவு நேரம் கழித்து போய் வாங்குகிறோம் அதனை எவ்வாறு உண்பது. உண்ணும் நேரம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ஆட்டினுடைய தலையை துண்டித்து சில மணி நேரங்களுக்கு மட்டுமே அதனுடைய உயிர் செல்கள் இருக்கும். ஆட்டினுடைய தலை துண்டித்த பின் கால் முதல் அரை மணி நேரம் உயிர் துடிப்புகள் இருக்கும். துடிப்பு நின்ற பின்னரும் சில மணி நேரங்கள் அதன் உயிர் செல்கள் இருக்கும். ஆனால் நாம் சில நேரங்களில் கறி வாங்கும் பொழுது ஆட்டு தலையை துண்டித்து, தோல் உரித்து பல மணி நேரம் கழித்து வாங்கி வந்து சமைத்து உண்கிறோம். இப்படி சமைத்துவம் என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஏனென்றால் பல மணி நேரம் ஆன கறி அழுகிப்போனதற்கு சமம். ஆடு தலை துண்டிக்கப்பட்டு ஐந்து மணி நேரத்திற்குள் சமையல் செய்வதுதான் சரியான முறையாகும்.

இவ்வாறு செய்ய வேண்டும் என்றால் காலையில் ஆட்டின் தலை துண்டித்து அதனை தோல் உரித்தவுடன் போய் வாங்கி வந்து காலையிலே சமைத்து உண்பது தான் மிகவும் சரியான முறையாகும். அன்றாடம் வாரத்தின் ஒரு முறை சாப்பிடக்கூடிய இந்த மாமிசத்தை சரியாக கவனித்து வாங்கி சமைத்து சாப்பிடுவது நல்லது.

மாமிசத்தை குளிர் சாதன பெட்டியில் சேமித்து அதனை சமைத்து உண்பது மிகவும் உடலுக்கு கெடுதலான ஒன்று. நாம் உடலுக்கு நோயை பணம் கொடுத்து வாங்கி கொள்ளக்கூடாது. ஆகையால் சரியான நேரங்களில் வாங்கி சரியான நேரத்தில் சமைத்து உண்டு அதில் உள்ள நன்மைகளை பெற்று மகிழுங்கள்.

 

Previous articleசேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!
Next articleஅசிடிட்டி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் குணமாக!! வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!