சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

0
155
#image_title

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

பதம்பார்க்கும் சேற்றுப்புண்
பாதங்களில் நிறைய ஈரம் படும்போது பயண இட விரல் இடுக்குகளில் உண்டாகிற நோய்க்கு ‘சேற்றுப் புண்’ பெயர். சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் விரல் இடுக்குகளைத் தாக்குவதால் இது ஏற்படுகிறது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பு உண்டாகி அதன் மூலம் புண் வரும். இதனால் மிகவும் தொல்லையும் அவதிப்படுவீர்கள்.

இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் அதிக நேரம் செருப்பணியாமல் வெறும் காலுடன் நிற்பதாலும் வரக்கூடும்.இதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. மருதாணி இலை
2. வேப்ப இலை
3. மஞ்சள் தூள்
4. உப்பு

செய்முறை:

காயத்திற்கு ஏற்பவாறு மருதாணி இலை, வேப்ப இலை, மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை விழுது போன்ற அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை சேற்றுப்புண் உள்ள இடங்களில் நன்கு தடவிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்து பின்னர் கழுவிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் முழு நேரமும் அப்படியே விட்டுவிடலாம். இந்தப் பற்று சில மணி நேரங்களுக்கு பின் தானாகவே உதிர்ந்து விடும். மேலும் இவ்வாறு செய்து வருகையில் சேற்றுப்புண் மீதுள்ள கிருமிகள் அகன்று காயம் முற்றிலும் குணமாகும். இதனை தொடர்ந்து மூன்று அல்லது ஐந்து நாட்கள் செய்து வருகையில் முற்றிலும் காயம் மாறிவிடும்.

author avatar
Selvarani