நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

0
202
#image_title

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

மருத்துவ படிப்புகளில் சேர இன்று நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் உளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது.

தேசிய தேர்வு முகமை ஆணையம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்  தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.இத்தேர்வு தனித்தனியாக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது.

இந்த வாரத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு 499 நகரகங்களில்  கடந்த மே மாதம் 7 ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் பங்கேற்றனர்.

தேசிய தேர்வு முகமை ஆணையம் தேர்வு முறை கேடு நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் பல்வேறு நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது வரையிலும்  நீட் தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.இதனால் 2023 ம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவு இன்னும் சில நாட்களில் வெளிவர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இத்தேர்வு விடைத்தொகுப்பில் ஏதேனும் குறை இருத்தால் தேசிய தேர்வு முகமைக்கு தெரியப்படுத்தலாம்.இருப்பினும் ஒரு விடைக்கான கட்டணம் ரூ 200 யை கட்டாயமாக செலுத்த வேண்டும்.குறை கண்டரியப்பட்டால் அந்த விடைகள் மாற்றம் செய்யப்படும். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகளை  https://neet.nta.nic.in/    என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Previous articleதாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!
Next article3 ஆண்டு காதல் 5  மாத கர்ப்பம் ஏமாற்றிய காதலன் ! துணிச்சலுடன் போராடி அதிரடி முடிவெடுத்த இளம்பெண்!