செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! 

Photo of author

By Priya

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!!

நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான  ஒன்றாகும்.

நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது  மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும்.

மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் மயானம் ஒன்று தேவை என்ற அடிப்படையில் இது தன்னார்வ அமைபினரால் நிறுவப்பட்டுள்ளது.

இனி செல்லபிராணி இறந்ததால் நீங்கள் இப்படியே செய்யலாம்.இப்பொழுது நமது வீட்டில் இறந்து போன செல்லபிராணியின் உடலை தகனம் செய்ய தனி மின் மயானம் ஒன்று முதன் முறையாக தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பலரும் வரவேற்று வருகின்றனர்.நமது வீட்டில் வளர்க்கும் பூனை , நாய் போன்ற செல்லபிராணிகள் உடலை தகனம் செய்ய கோவை மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்பினர் பலர் இணைந்து  தனி மின் மயானம் ஒன்று சீரநாயக்கன் பாளையம் என்ற பகுதியில் நிறுவியுள்ளனர்.