ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

0
221
#image_title

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணை நடத்தி, நீதிமன்ற காவலில் ஜூன் 28 தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த கைது நடவடிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆளுநரை சந்தித்து தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதில் எந்த அரசியல் உள்நோக்கம் இல்லை என தெரியப்படுத்தவும் மேலும் அரசு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தால் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனு அளிக்கின்றனர். இந்த திடீர் சந்திப்பு அதிமுக திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!
Next article90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!