கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

0
153

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த கோரமான விடபத்து நடந்துள்ளது.

தர்மஸ்தலா கோயிலுக்கு ஓசூரைச் சோர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரை நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கர்நாடகா குனிக்கல் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த காரின் மீது நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.

இவ்விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் விபத்து நடந்திருப்பதால் ஓட்டுனரின் தூக்கத்தால் கவனம் இல்லாமல் விபத்து நடந்திருக்கலாம் அல்லது சாலை விதிமுறையை மீறி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கேரள பேருந்தும் டைல்ஸ் லோடு ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Previous articleசிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!
Next articleதுண்டு சீட்டை பார்த்தவுடன் “கெட்ட வார்த்தையில் திட்டுவேன்’ என்று ராதாரவி ஆவேசம்! என்னதான் எழுதினார்கள்..?