உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?

0
150
#image_title

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?

 

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு முக ஸ்டாலின் அவர்களுக்கு செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயாணன் திருப்பதி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தி.மு.க காரர்களை யாரும் சீண்டி பார்க்க வேண்டாம். எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை. செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல். பழிவாங்கும் செயல்” என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார்.

 

மே 16ம் தேதி செந்தில் பாலாஜி மீது புதிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதமன்றம் உத்தரவிட்டது. இதில் எதாவது தவறு ஏற்படுமானால் உச்ச நீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அமலாக்கத் துறை தன் விசாரணையை தொடங்கலாம். அரசு பணியில் இருப்போர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்பொழுது பொதுவெளிக்கு வந்துவிட்டதோ அப்பொழுதே முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இந்த நிலைமையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் யாரை எதிர்க்கிறார். உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கிறாரா? யாருக்கு எச்சரிக்கை விடுகிறார். உச்ச நீதிமன்றத்திற்கா? உச்ச நீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவுக்கு அப்படி என்ன செந்தில் பாலாஜி மீது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு பாசம்? என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Previous articleஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!!
Next articleவறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!!