வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்! 

வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்! 

வேறு இனத்தினை சேர்ந்த மாணவனை காதல் செய்ததால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட  நிகழ்வில் விசாரணை முடிவில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  துமகூரு மாவட்டம், குப்பி தாலுகா சிக்ககெடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகள் நேத்ராவதி வயது 17. இவர், சிராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யூ.சி  இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  அதே கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தவர்  குமார் வயது.21. குமாரும் நேத்ராவதியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் நேத்ராவதியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து , குமார் வேறு சாதி என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஆனால் காதலில் நேத்ரா காதலில் உறுதியாக இருக்கவே இருவரும் கடந்த 7-ஆம் தேதி வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் காதல் ஜோடியை சமாதனமாக பேசி  அழைத்து வந்துள்ளனர். மேலும் நேத்ராவின் பெற்றோர் குமாரிடம் தங்கள் மகளின் மீதுள்ள காதலை கைவிடும் படி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை நேத்ரா விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்டதாக பரசுராம்  குடும்பத்தினர் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மாணவியின் இறப்பு குறித்து போலீசாருக்கு எந்தவித தகவலும் கொடுக்காமலே மாணவியின் உடலை எரித்துள்ளனர்.  இதில் சந்தேகம் அடைந்த கிராமத்தினர் மாணவி தற்கொலை செய்துக் கொள்ள வாய்ப்பில்லை. வேறு சாதி இளைஞரை காதலித்ததால் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து  ஜேலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. முதலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வந்த பரசுராம் பின்னர் மாணவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்,. அவர் கூறியிருப்பதாவது,

வேறு சாதி மாணவனை தங்களது மகள் காதலித்தது பிடிக்கவில்லை எனவும் பலமுறை கூறியும் கேட்காததால் கடந்த 8-ஆம் தேதி கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. இதனால் பரசுராம், அவரது மகன் சிவராம், சகோதரர் துக்காராம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை மற்றும் சாட்சியங்களை அளித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலித்த மகளை தந்தை ஆணவக்கொலை செய்த சம்பவம் குப்பியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.