திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0
267
#image_title

திருடு போனால் இனி நாங்கள் பொறுப்பல்ல!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

இந்திய  மக்கள் பெரும்பாலும் பேருந்து பயணத்தை  விரும்புவதில்லை காரணம் பேருந்தில் சென்றால் அதிக  நேரமாகும். ஆனால் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள் காரணம் குறைந்த நேரம் தான் ஆகும்.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொறு மாநிலத்திற்கு  செல்ல  அதிக பேருந்து வசதி இல்லை ஆனால் ரயில் வசதி உண்டு. மேலும் ரயிலில் பயணித்தால் வேகமாக  எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

ரயில் பயணத்தின் போது பயணிகள் கொண்டுவரும் உடைமைகளை அவர்கள் தான் பார்த்துக்  கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என தகவல் வெளியாகிள்ளது.

சுரேந்திர போலா என்பவர் உத்தர பிரதேசத்தில் 1 லட்சம் பணத்துடன்  ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த  பயணத்தின் போதும் அவர் வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து  இது குறித்து அவர் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும்  சுரேந்திர போலா இதுபற்றி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  மேலும் இது  குறித்து நீதிமன்றம்  விசாரித்து ரயில்வே நிர்வாகத்தை அந்த  1 லட்சத்தை தருமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்த ரயில்வே,  உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள்  ரயில்வேயின் கோரிக்கையை ஏற்று  புதிய உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில்  ரயில் பயணத்தின் போது பயணிக்கும் அனைவரின் உடைமைகளுக்கும்   அவர்கள் தான் பொறுப்பு என்றும் இதற்கு  ரயில்வே பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளது.