உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!!

Photo of author

By CineDesk

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் உகாண்டா. இதன் அருகே காங்கோ என்ற நாடு உள்ளது. இந்த இரண்டு நாடுகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதாவது நேச நாட்டு ஜனநாயகப் படைகள் என்பது உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஒரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவாகும். இது உகாண்டா அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது.

இது முதலில் மேற்கு உகாண்டாவை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் அண்டை நாடான டிஆர்சி-க்கு விரிவடைந்தது. பொது மக்களும், பாதுகாப்பு படையினரும் இந்த பயங்கரவாத அமைப்பால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த தாக்குதலில் பல பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வகையில், காங்கோ எல்லையோரம் அமைந்துள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள ஒரு பள்ளியில்  இரவில் பயங்கரவாதிகள் கூட்டம் நிகழ்த்திய தாக்குதலில் இருபத்தைந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் பரோவா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் சிலர் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்களா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு அரசியல் வாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.