துணைத்தேர்வுகள் நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

0
145
Supplementary Examination will be held!! School Education Department Notice!!
Supplementary Examination will be held!! School Education Department Notice!!

துணைத்தேர்வுகள்  நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

கேரளாவில் ஜூன் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து ஜூன் 18 ஆம் தேதி தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  இன்று  கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள்  விடுமுறை என பள்ளி கல்வித்துறை  அறிவித்துள்ளது.  இந்நிலையில் ஏற்கனவே +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று அதன் முடிவுகள் வெளிவந்துள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்துள்ளார்கள்.

அதனையடுத்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைதேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளர்கள்.இந்நிலையில் இன்று துணைத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் துணைத்தேர்வு நடைபெறுமா  என்ற சந்தேகம் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி தமிழ் துணைத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Previous articleமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 
Next articleபொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!