முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!!
ஆஷஸ் 2023 ஆம் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் துவங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாடியது.
இதில் ஜாக் கிரௌளி 61 பந்துகளில் 73 ரன்களும், ஜோ ரூட் 118 பந்துகளில் 152 ரன்களும், பேர்ஸ்டோ 78 பந்துகளில் 78 ரன்களும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து டிக்ளேரை அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 141 பந்துகளுக்கு 321 ரன்களும், டிராவிஸ் ஹெட் 50 பந்துகளில் 63 ரன்களும், பாட் கம்மின்ஸ் 38 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள்.
இதனால் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்தது. இதன் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடவில்லை. ஜோ ரூட், ஹேரி ப்ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதம் அடிக்காமல் தங்கள் விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் 273 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா மட்டும் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இறுதியாக பல முயற்சிகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிவடைந்த நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி கடைசி வரை பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தோம் என்றும், கடைசி 20 நிமிடங்களில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்களை இழந்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
மேலும் ஒரு சில விக்கெட்களை வீழ்த்த முடியும் என்று நம்பி தான் டிக்ளேர் அறிவித்தேன் என்று அவர் கூறி உள்ள நிலையில், “நாங்கள் இதே அதிரடியுடன் விளையாடுவோம் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.