பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!!
தாம்பரம் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய 8 வழி மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ 25 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு புதிய பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைத்துள்ளது.இது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டால் ஜிஏஸ்டி சாலையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதன் காரணமாக இதனை திறப்பதற்கு முன்னரே ஜிஏஸ்டி சாலையை தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை கருத்தில் கொண்டே சாலையின் ஒரு அங்கமான தாம்பரத்தில் புதிய 8 வழி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வரும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய மேம்பாலத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த மேம்பாலமானது ரூ 25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பழைய பாலத்தை இடித்து இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.
பழைய பாலமானது வெறும் 4 வழிகளை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில் 8 வழிகளுடன் இந்த புதிய பாலத்தை கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் வரும் 2024 ம் ஆண்டுக்குள் இந்த புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.